பாரதியார் பிறந்தநாள்: முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


பாரதியார் பிறந்தநாள்: முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x
தினத்தந்தி 11 Dec 2021 11:25 AM IST (Updated: 11 Dec 2021 11:25 AM IST)
t-max-icont-min-icon

பாரதியாரின் 140 வது பிறந்த நாளான இன்று, தமிழுக்குத் தொண்டு செய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவரும்,கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என அனைத்திலும் தனக்கென்று ஒரு பாதையை வகுத்து முத்திரையைப் படைத்தவரும், தன் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை தூண்டியவரும் தான் மகாகவி பாரதியார்.

பாரதியின் 140 வது பிறந்த நாளான இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில்,பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில்,மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்த நாளான இன்று,தமிழுக்குத் தொண்டுசெய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

"நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, திறம்பாட வந்த மறவன்,அறம்பாட வந்த அறிஞன், படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்த நாள் இன்று. தமிழுக்குத் தொண்டுசெய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்" என்று தெரிவித்துள்ளார்.

Next Story