“ஆகாயத்தில் அழகு தமிழ்” - சு.வெங்கடேசன் எம்.பி. மகிழ்ச்சி
விமானத்தில் தமிழ் அறிவிப்பை கேட்க மகிழ்ச்சியாக உள்ளதாக மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
இந்தியாவின் உள்நாட்டு விமான பயணங்களின் போது, பயணிகளிடம் பயண விவரம் குறித்த அறிவிப்பை விமானிகள் பொதுவாக ஆங்கில மொழியில் அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பயணித்த உள்நாட்டு விமானத்தில், விமானி தமிழில் அறிவிப்பு செய்ததை, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சென்னையிலிருந்து மதுரைக்குப் பயணம் செய்த பொழுது இண்டிகோ விமான விமானி பாலாஜி அழகு தமிழில் அறிவிப்பு செய்தார் எனவும், முதன் முறையாக உள்நாட்டு விமானத்தில் தமிழ் அறிவிப்பினை கேட்டு மகிழ்ந்தேன் எனவும் அதற்காக விமானி பாலாஜிக்கு வாழ்த்து கூறுவதாகவும் தெரிவித்து உள்ளார். அதனோடு, ஆகாயத்தில் அழகு தமிழ் எனவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
ஆகாயத்தில் அழகு தமிழ்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 10, 2021
முதன் முறையாக உள்நாட்டு விமானத்தில் தமிழ் அறிவிப்பினை கேட்டு மகிழ்ந்தேன்.
IndiGo 6E7197 விமானத்தில் சென்னையிலிருந்து மதுரைக்குப் பயணம் செய்த பொழுது விமானி பாலாஜி அழகு தமிழில் அறிவிப்பு செய்தார்.
வாழ்த்துகள் பாலாஜி. #Aeroplane#Airport#Tamil#தமிழ்pic.twitter.com/diVzsqXj5K
Related Tags :
Next Story