பெண்ணின் தாய்க்கு கொலை மிரட்டல்


பெண்ணின் தாய்க்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 12 Dec 2021 12:17 AM IST (Updated: 12 Dec 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் ஏட்டு மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி பெண்ணின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

போலீஸ் ஏட்டு மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி பெண்ணின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் தொந்தரவு
லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் கடந்த ஆகஸ்டு மாதம் தனது கணவர் குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளிக்க சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சண்முகம், அந்த பெண்ணை மசாஜ் சென்டருக்கு வருமாறு அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு ஏட்டு சண்முகம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கொலை மிரட்டல்
இதற்கிடையே ஏட்டு சண்முகம் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சண்முகத்துக்கு ஆதரவாக கணேசன் உள்பட 4 பேர், பெண்ணின் தாய் வேலை செய்யும் ஓட்டலுக்கு சென்று, சண்முகம் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும், இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெண்ணின் தாயார் பெரியகடை போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மேரி பிரான்சிஸ்கா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கணேசன் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story