20 மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்: நாளை தொடங்குகிறது
திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 20 மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நாளை தொடங்க உள்ளது.
சென்னை,
திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட கட்சியின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் நெல்லை, விருதுநகர் மேற்கு, நாகை, மயிலாடுதுறை, கரூர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு, செங்கல்பட்டு கிழக்கு மற்றும் செங்கல்பட்டு மேற்கு ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள, ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 14-ந்தேதி (நாளை மறுதினம்) முடிவடைகிறது.
இதற்கு மட்டும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி, நகரம் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.
Related Tags :
Next Story