படியில் பயணம்; நொடியில் மரணம்: பஸ் படியில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Dec 2021 11:22 AM IST (Updated: 12 Dec 2021 11:58 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம்,

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மாணவர்கள் பஸ்  படிக்கட்டில் நின்று பயணம் செய்வது பெரும் விவாத பொருளாகி மாறி உள்ளது. சில இடங்களில் மாணவர்கள் பஸ் படிகட்டுகளில் நின்றபடி ஆபத்தான சாகசங்களை மேற்கொள்வது கண்டிக்கப்படும் நிலையில், சில இடங்களில் பஸ்சில்  கூட்டம் காரணமாக மாணவர்கள் படிகளில் தொங்கி செல்லும் நிலையும் உள்ளது.

சமீபத்தில் இதுதொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில், மாணவர்கள் படிகளில் நின்றபடி பயணிக்காமல் இருப்பதை  பஸ் ஓட்டுனர், கண்டெக்டர் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அரக்கோணத்தில் பஸ்ஸின்  படியில் தொங்கியபடி சென்ற தினேஷ்குமார் என்ற மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் தனியார் கல்லூரி மாணவர் பஸ்சில் படியில் நின்று பயணித்த போது தவறி விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கல்லூரிக்கு செல்லும் போது நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த புது கண்டிகை சேர்ந்த  தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Story