திமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
சென்னை,
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 18 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story