கடற்கரை சாலையில் ரங்கசாமி ஆய்வு


கடற்கரை சாலையில் ரங்கசாமி ஆய்வு
x
தினத்தந்தி 12 Dec 2021 10:28 PM IST (Updated: 12 Dec 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

75-வது சுதந்திர தினத்தையொட்டி கடற்கரை சாலையில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார். அங்கு செல்பி எடுக்க சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

75-வது சுதந்திர தினத்தையொட்டி கடற்கரை சாலையில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார். அங்கு செல்பி எடுக்க சுற்றுலா பயணிகள்       குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இடம் தேர்வு
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 இடங்களில் தேசியக்கொடியுடன் 100 அடி உயர கொடிகம்பம் மற்றும் நினைவு தூண் அமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் நினைவுதூண் மற்றும் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 29-ந் தேதி ஆய்வு செய்தார். அப்போது கடற்கரை சாலையில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. குறிப்பாக காந்தி சிலை பின்புறம், நேரு சிலை அருகில் உள்ள இடம் ஆகியன கருத்தில் கொள்ளப்பட்டது. 
ரங்கசாமி ஆய்வு
இந்த நிலையில் கொடிக்கம்பம், நினைவு தூண் அமைப்பதற்காக நேற்று மீண்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலையில் ஆய்வு செய்தார். இதற்காக அவர் டூப்ளே சிலை அருகே பார்வையிட்டார். பின்னர் நேரு சிலை அருகே உள்ள பாண்லே பூத் முன் மற்றும் பழைய கலங்கரை விளக்கம் பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். பின்னர் எந்த இடத்தில் அமைத்தால் பொதுமக்களை கவரும் வகையில் இருக்கும் என்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வு முடிந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர் ஏற்றுக் கொண்டதையடுத்து சுற்றுலா பயணிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story