ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சை பதிவு: நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது
நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கீரனூர்:
நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாலா (வயது 35). இவர், குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சை கருத்துக்களை யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பாரதீய ஜனதா கட்சி மாவட்ட பிறமொழி தொடர்பு தலைவர் ராஜேந்திரன் கீரனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை கண்டித்து கீரனூர் காந்திசிலை முன்பு நாம் தமிழர் கட்சியினர் நகர தலைவர் சதாசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொது செயலாளர் ஜெயசீலன், மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், வழக்கறிஞர் ஜெயந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் தீனதயாளன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story