குட்டைகளில் வளர்ந்த கஞ்சா செடிகள்: பொதுமக்கள் அதிர்ச்சி..!


குட்டைகளில் வளர்ந்த கஞ்சா செடிகள்: பொதுமக்கள் அதிர்ச்சி..!
x
தினத்தந்தி 12 Dec 2021 11:48 PM IST (Updated: 12 Dec 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

சூலூர் அருகே பாப்பம்பட்டியில் குட்டைகளில் கஞ்சா செடிகள் வளர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் சாலையோரங்களிலும் குட்டைகளிலும் திடீரென கஞ்சா செடிகள் செழித்து வளர்ந்துள்ளன.  வளர்ந்த கஞ்சா செடிகள் வாசம் வீசத் தொடங்கியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர்.

சோதனையில் ஆங்காங்கே வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கண்ட போலீசார் அந்த செடிகளை வேரோடு பிடுங்கி தீயிட்டு அழித்தனர். இதுகுறித்து கூறிய அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ளதாகவும் அவர்களை குறிவைத்து அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என்றும் கூறினர்.

மேலும் வடமாநில தொழிலாளர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கஞ்சாவில் இருக்கும் விதைகள் முளைத்து கஞ்சா செடிகள் வளர்ந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர். மேலும் கஞ்சாவை ஒழிக்க சூலூர் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story