தேக்கடி படகு சவாரி மீண்டும் தொடக்கம்; மகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள்


தேக்கடி படகு சவாரி மீண்டும் தொடக்கம்; மகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 13 Dec 2021 1:58 AM IST (Updated: 13 Dec 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

கனமழையால் நிறுத்தப்பட்ட தேக்கடி படகு சவாரி 28 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கியது.



கூடலுார்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடியில் அடர்வன பகுதிக்கு நடுவே உள்ள ஏரியில் படகு சவாரி செய்து வனவிலங்குகளை ரசிக்கலாம்.
இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கேரள வன துறை, சுற்றுலா துறைக்கு சொந்தமான 10 படகுகள் இயக்கப்படுகின்றன.

வடகிழக்கு பருவமழையால் பெய்த கனமழையால் நவம்பர் 14ந்தேதி நிறுத்தப்பட்ட படகு சவாரி மீண்டும் துவங்கியது. காலை 7.30, 9.30, 11.15, மதியம் 1.15, 3.30 மணி என 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன.  தலா ரூ.240 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டணம் கிடையாது.  படகு சவாரி மீண்டும் தொடங்கியுள்ளது, சுற்றுலா பயணிகள் இடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story