40 அடி நீள தியாகச்சுவர் அமைக்கும் பணி


40 அடி நீள தியாகச்சுவர் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 13 Dec 2021 11:31 PM IST (Updated: 13 Dec 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் மற்றும் 40 அடி நீள தியாக சுவர் அமைக்கும் பணியை முதல்- அமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் மற்றும் 40 அடி நீள தியாக சுவர் அமைக்கும் பணியை முதல்- அமைச்சர் ரங்கசாமி அடிக்கல்  நாட்டி தொடங்கிவைத்தார்
100 அடி உயர கொடிக்கம்பம்
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 இடங்களில் தேசியக்கொடியுடன் கூடிய 100 அடி உயர கொடிகம்பம் மற்றும் தியாகச் சுவர் அமைக்கப்பட   உள்ளது. அதன்படி புதுவை கடற்கரை சாலையில்   உள்ள  காந்தி திடலில் இந்த பிரமாண்ட கொடிக்கம்பம் மற்றும் 40 அடி நீளமும், 12 அடி உயரமும் கொண்ட   தியாகச்சுவர் அமைக்கப்படுகிறது. 
இதற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம்,    அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா,  பா.ஜ.க. மாநில தலைவர்     சாமிநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா, சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவன தலைவர்    டாக்டர்  கனக சபாபதி, சக்ரா விஷன் பவுண்டேசன் நிர்வாகி ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தியாகச் சுவர்
தியாகச்சுவரின் நினைவு தூண்களில் இந்தியாவிற்காக போராடிய   சுதந்திர போராட்ட  வீரர்களின் பெயர்கள்        பொறிக்கப் படும். அதன் அருகில் உள்ள கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்து   பார்த்தால் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த   கொடிக்கம்பம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் இந்த திட்டத்தை பிரதமர் மோடி     திறந்து  வைக்க உள்ளார். 
50-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது ஏ.ஆர். ரகுமான் பாடிய தாய் மண்ணே வணக்கம் என்ற பாடலை போல 75-வது ஆண்டில் ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்க 12 மொழிகளில் பிரபல பாடகர்கள், நடிகர், நடிகைகள் பாடிய வீடியோ ஆல்பம் உருவாகி வருகிறது. மேலும் 6 கி.மீ. நீளத்திற்கு சுதந்திர    போராட்ட  வீரர் களின் போராட்ட நிகழ்வுகள் உலகின் மிக நீளமான ஓவியமாக வரையப்பட உள்ளது.

Next Story