2 வாலிபர்கள் கைது


2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 13 Dec 2021 11:36 PM IST (Updated: 13 Dec 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளை திருடி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

காரைக்காலை அடுத்த நிரவி அருள்மொழிதேவன் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். நேற்று முன்தினம் காரைக்கால்- திருநள்ளாறு சாலையில் உள்ள ஒரு வங்கி முன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைவீதிக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து   திரும்பி  வந்தபோது  மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து  காரைக்கால்  நகர போலீசில் முருகானந்தம் புகார் செய்தார். அதன்பேரில்  போலீசார்  வழக்குப்பதிவு   செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே காரைக்கால் மதகடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த ரகுநாதன் (வயது 34),   அவரது  நண்பர்  கடலூர்  திட்டக்குடியை சேர்ந்த கருப்பையா (33) என்பதும், காரைக்கால் திருநள்ளாறு சாலையில் நிறுத்தியிருந்த முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story