தனியார் நிறுவன ஊழியரிடம் கைவரிசை காட்டிய நண்பர் கைது
ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி தனியார் நிறுவன ஊழியரிடம் கைவரிசை காட்டிய நண்பரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி தனியார் நிறுவன ஊழியரிடம் கைவரிசை காட்டிய நண்பரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்
புதுவை அண்ணா நகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் பிந்தி ரவி (வயது 50). தனியார் நிறுவன ஊழியர். இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.72 ஆயிரம் மாயமாகி இருந்தது. குறிப்பாக அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பல தவணைகளாக பணம் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிந்திரவி, புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது பிந்தி ரவியின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி எங்கெங்கு பணம் எடுக்கப்பட்டதோ? அந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
கைது
அப்போது பிந்தி ரவியின் நெருங்கிய நண்பரான முதலியார்பேட்டை ஜான்சி நகரை சேர்ந்த வெங்கட்ராமன் என்ற பாலாஜி சுந்தரம் (50) ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிந்தி ரவிக்கு தெரியாமல் ஏ.டி.எம்.கார்டை எடுத்து வெங்கட்ராமன் பணத்தை எடுத்ததும், ஒன்றும் தெரியாதது போல் பிந்திரவியுடன் வந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததும் தெரியவந்தது. அதையடுத்து வெங்கட்ராமனை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளை புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன், சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story