கையுறையின்றி தூர்வாரிய துப்புரவு பணியாளர்கள்


கையுறையின்றி  தூர்வாரிய துப்புரவு பணியாளர்கள்
x
தினத்தந்தி 14 Dec 2021 12:19 AM IST (Updated: 14 Dec 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

சாக்கடை கால்வாயை கையுறையின்றி தூர்வாரிய துப்புரவு பணியாளர்களின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறத

புதுச்சேரியை அடுத்த மூலக்குளம் பகுதியில் கடைத்தெரு வழியாக கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இங்கு துப்புரவு பணியாளர்கள் 2 பேர் கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேரும் கையுறை, பாதுகாப்பு கவசம் எதுவும் அணியாமல் ஆபத்தான முறையில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாக்கடை கால்வாயில் மனித கழிவுகளும் மிதந்து வந்தன. அதையும் பொருட்படுத்தாமல் அகற்றினர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கையுறை, பாதுகாப்பு உடை அணிந்து பணி செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இருப்பினும் ஊழியர்கள் கையுறை, பாதுகாப்பு உடை அணியாமல் கழிவுகளை அகற்றியது வேதனை அடைய செய்துள்ளது.

Next Story