சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 5-ந் தேதி சட்டசபை கூடுகிறது முதல் நாளில் கவர்னர் உரையாற்றுகிறார்
கொரோனா தொற்று குறைந்த நிலையில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அடுத்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 5-ந் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்ற இருப்பதாக சபாநாயகர் அப்பாவு நேற்று தெரிவித்தார்.
சென்னை,
கொரோனா தொற்று பரவலுக்கு முன்பாக தமிழக சட்டசபை கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்தது.
1¾ ஆண்டுகளுக்கு பிறகு...
கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 24-ந்தேதியுடன் சட்டசபை கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் சமூகஇடைவெளியை கருத்தில் கொண்டு சென்னை கலைவாணர் அரங்கத்துக்கு சட்டசபை கூட்டம் மாற்றப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகும் கலைவாணர் அரங்கத்தில்தான் கூட்டம் நடைபெற்றது.
இறுதியாக கடந்த செப்டம்பா் மாதம் 13-ந்தேதி வரை அங்கு கூட்டம் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில் 1¾ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் ஜனவரி 5-ந்தேதி சட்டசபை கூடுகிறது.
இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா கட்டுக்குள் வந்தது
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது தமிழகத்தில் தினமும் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது. அந்த மோசமான நிலை படிப்படியாக குறைக்கப்பட்டது.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து சமூக இடைவெளியுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை நடந்து வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு 600-க்கு உட்பட்டுத்தான் உள்ளது.
சட்டசபை கூடுகிறது
எனவே, தலைமைச்செயலகத்தில் ஏற்கனவே நடந்து வந்த இடத்தில் (சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில்) சட்டசபையை நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டுக்கான (2022) சட்டசபை ஜனவாி 5-ந்தேதி கூடுகிறது. கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் அன்று காலை 10 மணிக்கு தொடங்கும்.
சட்டசபை கூட்டத்தொடரை கவர்னர் உரையுடன் தொடங்குவதுதான் மரபாகும். அதன்பின்னர் பொது பட்ஜெட், மானிய கோரிக்கைகள் ஆகியவற்றிற்கான கூட்டத்தொடர்களும் அடுத்தடுத்து நடைபெறும்.
முககவசம் கட்டாயம்
மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் உருவப்படத்தை சட்டசபையில் திறப்பது குறித்து உரிய காலத்தில் பதில் தரப்படும்.
தமிழக சுகாதாரத்துறை கடுமையான முயற்சி எடுத்து, மிகப்பெரிய அளவில் பிரசாரம் மேற்கொண்டு 83 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 50 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. எனவே சமூக இடைவெளி தேவையில்லை என்று கருதப்பட்டு சென்னை கோட்டையில் சட்டசபை கூட்டப்படுகிறது. சட்டசபைக்கு வரும் அனைவரும் முககவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும்.
பார்வையாளர் அனுமதி?
சட்டசபை கூட்டத்தொடரின்போது தொடுதிரைகள் கண்டிப்பாக அனைத்து உறுப்பினர்களின் மேஜையிலும் வைக்கப்பட்டிருக்கும். காகிதமில்லா பட்ஜெட்டாக சட்டசபையை தொடங்கினோம்.
இங்கும் எல்லா சட்டசபை பணிகளும் காகிதமில்லாமல் தொடுதிரை உதவியுடன் நடத்தப்படும். எம்.எல்.ஏ.க்கள் அதை பயன்படுத்தி கொள்ளலாம்.
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சட்டசபை செயலகத்தின் கவனத்தில் உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபையில் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு எடுக்கும்.
கண்காணிக்க அல்ல
நாடாளுமன்றத்தில் இருந்து அதிகாரி ஒருவர் இங்கு நியமிக்கப்பட்டு இருப்பது பற்றி கேட்டால், சட்டசபை பணிகளை கண்காணிப்பதற்காக அவர் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரியவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்துதான் செயல்படுகின்றன.
இணைந்தே பல திட்டங்களை 2 அரசுகளும் செயல்படுத்துகின்றன. அனைத்து திட்டங்களுமே மாநில அரசு மூலமாகத்தான் செயல்படுத்தப்படுகின்றன. எனவே கண்காணிப்பதற்கான அவசியம் இங்கு எழவில்லை.
தமிழக முதல்-அமைச்சர், ‘நம்பர் 1’ முதல்-அமைச்சர் என்று இந்தியா டுடே பத்திரிகை கூறியுள்ளது. அதனால், இங்கு எப்படி நடைபெறுகிறது என்பதை பார்வையிட்டு மற்ற மாநிலங்களுக்கோ, நாடாளுமன்றத்திற்கோ கொண்டு செல்லலாம். அதற்காக அந்த அதிகாரி இங்கு வந்திருக்கலாம். எல்லாமே நல்லபடியாகத்தான் நடைபெற்று வருகிறது.
அது என் வேலையல்ல
சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் காலதாமதம் இல்லாமல் நிறைவேற வேண்டும் என்ற கருத்து, சிம்லாவில் நடந்த சபாநாயகர்களின் மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டது. நான் பேசிய அந்த கருத்துகளை கவர்னரிடம் நேரில் நான் சொல்லப்போவதில்லை, சொல்லவும் கூடாது. சபாநாயகர்களுக்குள் நடந்த மாநாடு என்பதால்தான், அனைத்து மாநில சபாநாயகர்களும் வந்திருந்ததினால், அதில் அந்த கருத்தை சொல்ல முடிந்தது.
மற்றபடி, கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தில் இருக்கும் கவர்னர், ஜனாதிபதியிடம் போய் சொல்வது, சபாநாயகரின் வேலை அல்ல. அந்தப்பணி சபாநாயகருக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் உடனிருந்தார்.

Related Tags :
Next Story