பரங்கிப்பேட்டை அருகே திருநங்கை அடித்துக் கொலை
இந்த கொலை குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை,
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தையாகுப்பம் புற்று மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் அர்ஜுனன் என்கிற பனிமலர் (வயது 35) .இவர் திருநங்கை ஆவார் .
நேற்று இரவு 12 மணியளவில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புமுட்லூரில் உள்ள ஒரு தனியார் சர்வீஸ் ஸ்டேஷன் அருகில் முகம் தாடை தலை போன்ற பகுதியில் பயங்கர வெட்டுகாயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தார்.
இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவருக்கு முன்விரோதம் உள்ளதா என்றும் போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்
திருநங்கை அர்ஜுனன் என்கிற பனிமலர் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக புவனகிரி அருகே உள்ள தையாகுப்பம் பகுதியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story