காவல்துறை தாக்கியதால் மணிகண்டன் உயிரிழக்கவில்லை: ஏ.டி.ஜி.பி. விளக்கம்


காவல்துறை தாக்கியதால் மணிகண்டன் உயிரிழக்கவில்லை: ஏ.டி.ஜி.பி. விளக்கம்
x
தினத்தந்தி 14 Dec 2021 8:23 PM IST (Updated: 14 Dec 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

மணிகண்டன் இறப்பு குறித்து சமூக வளைத்தளங்களில் பல்வேறு செய்திகள் பரவின. அவை நிறுத்தப்பட வேண்டும் எனசட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன் தெரிவித்தார்.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல்துறை தாக்கி உயிரிழக்கவில்லை என்பது மறு பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்

 கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழப்பு தொடர்பாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன்  விளக்கம் அளித்துள்ளார்.  

அப்போது அவர் பேசியதாவது: காவல்நிலையத்தில் விசாரித்த பின்னர் தாயார் மற்றும் உறவினரிடம் மணிகண்டன் ஒப்படைக்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் உள்ளது. 

மணிகண்டன் பிரேத பரிசோதனை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி தடய அறிவியல் நிபுணர்கள் குழு மூலம் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.  இதன் மூலம் அவர் காவல்துறையினர் தாக்கி உயிரிழக்கவில்லை. மணிகண்டன் இறப்பு குறித்து சமூக வளைத்தளங்களில் பல்வேறு செய்திகள் பரவின. அவை நிறுத்தப்பட வேண்டும்”  என்றார். 

Next Story