பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி


பொதுமக்களின்  கவனத்தை  ஈர்க்கும்   கண்ணீர்   அஞ்சலி   சுவரொட்டி
x
தினத்தந்தி 15 Dec 2021 12:35 AM IST (Updated: 15 Dec 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

புதுவை நெல்லித்தோப்பு சிக்னலில் வைக்கப்பட்டுள்ள கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுவை நெல்லித்தோப்பு சிக்னலில் வைக்கப்பட்டுள்ள      கண்ணீர் அஞ்சலி    சுவரொட்டி    பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவரொட்டி
புதுவையில் திருமணம்,  புதுமனை புகுவிழா, தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து    சுவரொட்டிகள்  ஒட்டப்படுவது வழக்கம். அதேபோல் யாராவது இறந்தால்    அவர்களது  மறைவுக்கு அஞ்சலி    செலுத்தும்    வகையிலும் சுவரொட்டிகள் ஒட்டப்படும்.
ஆனால் ஒரு ஹைமாஸ் விளக்கு எரியவில்லை என்பதற்காக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி          பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.   அதாவது நெல்லித்தோப்பு சிக்னலில் நிறுவப்பட்டுள்ள விளக்கு பல  மாதங்களாக எரியாமல் உள்ளது. இதை எரிய வைக்க வேண்டும் என்று கோரி    அனைத்திந்திய  இளைஞர் பெருமன்றத்தினர்,   கடந்த   வாரம் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.   அந்த ஹைமாஸ்  விளக்கு  கம்பத்தில் சுவரொட்டி   ஒன்றையும் ஒட்டியுள்ளனர்.
அடக்கம் செய்ய...
அதில் கண்ணீர் அஞ்சலி என்ற தலைப்பில் புதுச்சேரி அரசே இந்த ஹைமாஸ் விளக்கு இறந்துவிட்டது. அடக்கம் செய்ய நடவடிக்கை எடு என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
பொதுமக்கள்     பலரும்       இந்த  சுவரொட்டியை பார்த்து செல்லும் நிலையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்ணில் பட்டதாக தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ இந்த ஹைமாஸ் விளக்கு இன்னும் எரியாமல் உள்ளது.

Next Story