நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க தமிழக அரசு புது நடவடிக்கை...


நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க தமிழக அரசு புது நடவடிக்கை...
x
தினத்தந்தி 14 Dec 2021 8:22 PM GMT (Updated: 14 Dec 2021 8:22 PM GMT)

நாட்டுப்புற கலைகளை பாதுகாக்கவும், கலைஞர்களின் வாழ்வை வளப்படுத்தவும் தமிழக அரசு புது நடவடிக்கை எடுத்துள்ளது.




சென்னை,

தமிழகத்தில் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்கவும், கலைஞர்களின் வாழ்வை வளப்படுத்தவும் தமிழக அரசு புது நடவடிக்கை எடுத்துள்ளது.  இதன்படி, அரசு, தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆலைகள், கல்விநிறுவனங்கள் போன்றவற்றில் நடைபெறும் விழாக்களிலும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு விழாக்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க ஆணையிட்டு அரசாணையை வெளியிட்டுள்ளது.


Next Story