செங்கோட்டை- கொல்லம் இடையே இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்


செங்கோட்டை- கொல்லம் இடையே இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 15 Dec 2021 6:52 AM IST (Updated: 15 Dec 2021 6:52 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை- கொல்லம் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கோட்டை- கொல்லம் இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (எண். 06659) இன்று (புதன்கிழமை) முதல் இயக்கப்படும். இன்று காலை 11.35 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3.35 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறு மார்க்கமாக நாளை (வியாழக்கிழமை) முதல் கொல்லம் - செங்கோட்டை சிறப்பு ரெயில் (எண். 06660) காலை 10.20 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

இந்த ரெயில்கள் முற்றிலும் முன்பதிவில்லா 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 12 பெட்டிகளுடன் இயக்கப்படும். இவை பகவதிபுரம், நியூ ஆரியங்காவு, தென்மலை, எடமண், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, ஏழுகோன், குண்டரா, கிளிக்கொல்லூர் வழியாக இயக்கப்படும். மேலும் இந்த ரெயில்கள் ஆரியங்காவு, எடப்பாளயம், கல்துருத்தி, ஒற்றக்கல், குரி, குண்டரா ஈஸ்ட் மற்றும் சந்தன தோப்பு ஆகிய நிலையங்களிலும் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story