பணவீக்கம்-வேலையின்மை; மோடி அரசின் ஆண்டு இறுதி பரிசுகள் - ப.சிதம்பரம்
பணவீக்கம்-வேலையின்மை-வாராக்கடன் தள்ளுபடி ஆகியவை மோடி அரசின் ஆண்டு இறுதி பரிசுகள் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சென்னை,
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
மோடி அரசின் ஆண்டு இறுதி பரிசுகளை அனுபவிப்போம். சில்லரை பணவீக்கம் 4.91 சதவீதம். இதில் எரிபொருள் மற்றும் ஆற்றல் 13.4 சதவீதம். வேலையின்மை விகிதம் 8.53 சதவீதம். இதில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 10.9 சதவீதம்.
வங்கிகள் 2020-21-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 783 கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. 13 கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தவேண்டிய கடனை தீர்த்ததால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்து 980 கோடி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story