ஒமைக்ரான்: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்


ஒமைக்ரான்: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 Dec 2021 12:18 PM IST (Updated: 15 Dec 2021 12:18 PM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

இது குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளான கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பது இல்லை என்பது வேதனை அளிக்கிறது. 

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தவும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story