தமிழகத்தில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 15 Dec 2021 7:04 PM IST (Updated: 15 Dec 2021 7:04 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 649 இல் இருந்து 640 ஆக குறைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1,02,775 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 640 ஆக உள்ளது. 
சென்னையில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

கொரோனாவால் மேலும் 11 பேர் உயிரிழந்தநிலையில் பலி எண்ணிக்கை 36,644  ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 9 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7,548 ஆக குறைந்துள்ளது.  கொரோனாவில் இருந்து மேலும் 692 பேர் குணமடைந்த நிலையில் இதுவரி 26,93,143 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

கோவையில் 107 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 106 ஆக குறைந்துள்ளது.  ஈரோட்டில் 51 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 49 ஆக குறைந்தது.

செங்கல்பட்டு  -48, திருப்பூர் -45, சேலம் -41, நாமக்கல் - 39, திருவள்ளூர் -18, நீலகிரி -17 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story