குரூப் கேப்டன் வருண் சிங் மறைவு: வீரமும், தியாகமும் அளப்பரியது - பழனிசாமி இரங்கல்


குரூப் கேப்டன் வருண் சிங் மறைவு: வீரமும், தியாகமும் அளப்பரியது - பழனிசாமி இரங்கல்
x
தினத்தந்தி 15 Dec 2021 8:15 PM IST (Updated: 15 Dec 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீலகிரி மாவட்டம் கடந்த 8-ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வருணசிங் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது டுவிட்டர் பதிவில், 'குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு,கடுமையாக போராடி வந்த குரூப் கேப்டன் வருண் சிங் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரது வீரமும் தியாகமும் அளப்பரியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.' என பதிவிட்டுள்ளார்.

Next Story