81 நிமிடத்தில் உருவான திரைப்படம்


81 நிமிடத்தில் உருவான திரைப்படம்
x
தினத்தந்தி 16 Dec 2021 12:10 AM IST (Updated: 16 Dec 2021 12:10 AM IST)
t-max-icont-min-icon

கே.பாக்கியராஜ் நடிப்பில் 81 நிமிடம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கே.பாக்கியராஜ் நடிப்பில் 81 நிமிடம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
81 நிமிட படப்பிடிப்பு
தமிழ் திரையுலகில் புதிய இயக்குனரான சிவ மாதவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில்    படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். நடித்துள்ளார்.   மாரிஸ்வரன்  ஒளிப் பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கார்த்திக் ஹர்ஷா இசை அமைத்துள்ளனர்.
உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின்     படிப்பிடிப்பு புதுச்சேரி      பிள்ளையார் குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நேற்று நடந்தது. காலை 11.40 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மதியம் 1.01 மணிக்கு முடிந்தது. ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், 450 பணியாளர்களை கொண்டு படமாக்கப்பட்டது.
உலக சாதனைக்கு பரிந்துரை
நாலேஜ் என்ஜினீயரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனிப் நடுவராக இருந்து படப்பிடிப்பை நேரடியாக பார்வையிட்டு, அமெரிக்காவில் உள்ள ‘வேர்ல்டு ரெக்கார்டு யூனியன்’ அமைப்பிற்கு உலக சாதனைக்கு பரிந்துரை செய்துள்ளார். விரைவில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என  படக்குழு வினர் நம்புகின்றனர்.
இது குறித்து படத்தின் இயக்குனர் சிவமாதவ் கூறுகையில், ‘3.6.9’ படம் கதாநாயகி, சண்டை காட்சிகள், பாடல்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால், திரைக்கு வரும்போது இவை அனைத்தும் இடம் பெற்று வழக்கமான படங்களை போன்று வெளி வரும். இப்படத்தில் ஹாலிவுட் தரத்துக்கு இணையான தொழில்நுட்பங்கள்   பயன் படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story