ரங்கசாமியிடம் மழை நிவாரணம் கேட்ட காரைக்கால் பிரமுகர்


ரங்கசாமியிடம் மழை நிவாரணம் கேட்ட காரைக்கால் பிரமுகர்
x
தினத்தந்தி 16 Dec 2021 12:24 AM IST (Updated: 16 Dec 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் மூலம் ரங்கசாமியிடம் மழை நிவாரணம் கேட்ட காரைக்கால் பிரமுகரின் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இதனை தொடர்ந்து மழை நிவாரணமாக அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் அந்த பணம் இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த 11-ந் தேதி போக்குவரத்து துறை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, அடுத்த வாரம் மழை நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் செல்போன் எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், நான் காரைக்காலில் இருந்து பேசுகிறேன். மழை நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள், இன்னும் வரவில்லை என்று கூறினார். அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, நான் மட்டும் ராஜா இல்லை. எனக்கு கீழே அமைச்சர்கள் உள்ளனர். மேலே உள்ளனர். இது புதுச்சேரி, அப்படி தான் இருக்கும் என்று பதில் அளித்தார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Next Story