புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ரூ 500 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு
புதுவையில் வங்கி ஊழியர்களின் போராட்டம் காரணமாக ரூ.500 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி
புதுவையில் வங்கி ஊழியர்களின் போராட்டம் காரணமாக ரூ.500 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மசோதாவை கைவிட வலியுறுத்தி 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது. புதுவையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன.
ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
இந்த போராட்டத்தில் 13 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், 5 தனியார் வங்கிகளை சேர்ந்த 1,400 ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.500 கோடி அளவில் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் ஏ.டி.எம்.கள் செயல்பட்டன. ஆனால் அவற்றில் பணம் சரிவர நிரப்பப்படாததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள யூகோ வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு இன்று காலை கூடினார்கள். அங்கு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கன்வீனர் முரளிதரன் தலைமை தாங்கினார். மசோதாவை கைவிட வலியுறுத்தி நிர்வாகிகள் சுந்தரவரதன், கருணாகரன் ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜ்குமார், ரவீந்திரன், அசோகன், நிதிஷ், அன்பரசு, கண்ணன், திருமாறன், ஹரிகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story