காலி பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் நூதன போராட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன போராட்டம்
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அறிவித்தபடி பொதுப்பணித்துறையில் போர்மேன், ஓவர்சீயர், சீனியர் மெக்கானிக், ஒர்க் இன்ஸ்பெக்டர், மீட்டர் ரீடர், பல்நோக்கு ஊழியர் போன்ற பதவிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், வவுச்சர் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாகவும், 26 நாட்கள் வேலையும் அறிவித்ததை நிர்வாகம் முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பறையடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலந்துகொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்துக்கு சரவணன் தலைமை தாங்கினார். வீராசாமி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் சேகர், துணை பொதுச்செயலாளர்கள் ஞானசேகர், அன்பழகன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஆலோசகர்கள் அப்துல் அஜிஸ், தேவராஜ், ஏகாம்பரம், துணைத்தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story