மதுபான கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


மதுபான கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Dec 2021 7:28 PM IST (Updated: 16 Dec 2021 7:28 PM IST)
t-max-icont-min-icon

பாகூர் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பாகூர்
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. 
இந்தநிலையில், பாகூர் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், தட்டு, பைகள் போன்றவை பயன்படுத்தப்படுவதாக சுற்றுச்சூழல் துறைக்கு புகார்கள் வந்தன. 
அதன்பேரில் சீனியர் சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் ரமேஷ், பாகூர் தாசில்தார் குப்பன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் முள்ளோடை, சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடைகள், பார்கள் மற்றும் பெட்டிக் கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story