நெல்லை பள்ளி விபத்து - மாணவர்கள் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


நெல்லை பள்ளி விபத்து - மாணவர்கள் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2021 6:04 PM IST (Updated: 17 Dec 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக மாணவர்கள் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இந்தநிலையில்  நெல்லை தனியார் பள்ளியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்

இறந்த மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  

விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால பரபரப்பு நிலவி வருகிறது.

Next Story