கவர்னர் ஆர்.என் ரவியை சந்தித்தார் துரைமுருகன்


கவர்னர் ஆர்.என் ரவியை சந்தித்தார் துரைமுருகன்
x
தினத்தந்தி 17 Dec 2021 6:44 PM IST (Updated: 17 Dec 2021 6:44 PM IST)
t-max-icont-min-icon

நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க கவர்னரிடம் துரைமுருகன் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருகிற 2022, ஜன.5 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை கூட்டுத்தொடரில் ஆளுநர் உரைக்கு அழைப்பு விடுப்பதற்காக ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என் ரவியைச் சந்தித்தார்.  இந்த சந்திப்பின் போது  நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் மசோதாவை ஜனாதிபதிக்கு விரைந்து அனுப்பி வைக்க, கவர்னருக்கு கடந்த முறை முதல்-அமைச்சர் நேரில் வலியுறுத்திய நிலையில், அது தொடர்பாக துரைமுருகன் மீண்டும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story