வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்க ஆலோசனை
வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
புதுச்சேரி
வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
உயர் அதிகாரிகள் ஆலோசனை
புதுவையில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுக்க போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. வீரேந்திர குமார், ரெயில்வே சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், புதுவை டி.ஐ.ஜி. மிலிந்த் தும்ரே, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், போலீஸ் சூப்பிரண்டுகள் ரங்கநாதன், ஜிந்தாகோதண்டராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, மனோஜ் மற்றும் ரெயில்வே போலீசார் கலந்துகொண்டனர்.
கஞ்சா கடத்தல்
அப்போது ரெயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்புக்காக கண்காணிப்பினை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரெயில் நிலைய சுற்று பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சுற்றுசுவர்களை கட்டுவது, கஞ்சா, வெடிகுண்டுகள் பதுக்கலை தடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
மேலும் ரெயில்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு விஷயத்தில் ரெயில்வே போலீசார், புதுச்சேரி போலீசாருடன் இணைந்து செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
===
Related Tags :
Next Story