தேசிய புத்தக கண்காட்சி ரங்கசாமி தொடங்கிவைத்தார்.


தேசிய புத்தக கண்காட்சி   ரங்கசாமி தொடங்கிவைத்தார்.
x
தினத்தந்தி 17 Dec 2021 10:03 PM IST (Updated: 17 Dec 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 10 நாட்கள் நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி
புதுச்சேரியில் 10 நாட்கள் நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்.

புத்தக கண்காட்சி

புதுச்சேரி எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் 25-வது தேசிய புத்தக கண்காட்சி வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில்  வருகிற 26-ந் தேதி     வரை  நடக்கிறது. இதன் தொடக்கவிழா  நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி ரிப்பன்வெட்டி புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். புதுவை எழுத்தாளர்களின் புத்தங்களையும் அவர் வெளியிட்டார். புத்தக சேவா ரத்னா விருதுகளையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கி கவுரவித்தார். விழாவில் புதுவை எழுத்தாளர் புத்தக சங்க தலைவர் முத்து வரவேற்று பேசினார். சிறப்பு தலைவர் பாஞ்.ராமலிங்கம் நோக்க உரையாற்றினார். முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற   செயலாளர் ஜான் குமார் வாழ்த்திப் பேசினார்.
விழாவில் நேரு வீதி வியாபாரிகள் சங்க செயலாளர் இசைக்கலைவன், புதுச்சேரி எழுத்தாளர் புத்தக சங்க செயலாளர் கோதண்டபாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விற்பனை அரங்குகள்

இந்த கண்காட்சியில் 70 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குள் அமைக்கப்பட்டுள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இங்கு புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
கண்காட்சியானது பகல் 11 மணிமுதல் இரவு 8மணிவரை செயல்படுகிறது. இதற்கான அனுமதி இலவசமாகும். புத்தக வாசிப்பினை ஊக்குவிக்கம் வகையில் ரூ.1000-க்கு புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழும், ஆயிரத்தின் மடங்கில் வாங்குபவர்களுக்கு நட்சத்திர சான்றிதழும் வழங்கப்படும். ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக புத்தகம் வாங்குபவர்களுக்கு புத்தக சிறந்த நட்சத்திரம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Next Story