தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் - செல்லூர் ராஜூ பேச்சு


தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் - செல்லூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 18 Dec 2021 2:52 AM IST (Updated: 18 Dec 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரை,

தி.மு.க. அரசை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செல்லூர் 50 அடி ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது செல்லூர் ராஜூ கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு முறையாக பேணப்பட்டு, தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து இன்னும் 6 மாதம் கூட ஆக வில்லை அதற்குள் பல இடங்களில் கொள்ளை, கொலை என அரங்கேறி கொண்டு இருக்கிறது. மக்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தலின்போது தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டது. தற்போது ஆட்சிக்கு வந்தவுடன், அந்த வாக்குறுதிகளை தி.மு.க.வால் நிறைவேற்ற முடியவில்லை. மகளிருக்கு மாதம் ரூ.1000 தருகிறேன் என்றார்கள். கல்வி கடன் ரத்து என்று சொன்னார்கள். சிலிண்டருக்கு மானியம் தருவதாக கூறினார்கள். இதுபோல பல பொய்களை கூறி மக்களின் வாக்குகளை பெற்றார்கள். 

ஆனால் இந்த வாக்குறுதிகளை எதையும் தற்போது நிறைவேற்றவில்லை. தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story