அரக்கோணம்,அரக்கோணம் அருகே ’தீரன்’ பட பாணியில் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் செய்யூர் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்கரன். அவர் தனது குடும்பத்தினருடன் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, புஷ்கரனின் வீட்டுக் கதவை வேகமாக மர்ம நபர்கள் தட்டியிருக்கிறார்கள். என்னவோ ஏதோவென பதறிப் போய், புஷ்கரன் வீட்டுக்கதவை திறந்ததும், பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வெளியே நின்றுள்ளனர்.இதனால், அதிர்ச்சி அடைந்த புஷ்கரன் உடனே வீட்டின் கதவை மூடியுள்ளார். எனினும், வெளியிலிருந்த கும்பல் வீச்சரிவாளால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. புஷ்கரன் உள்பட வீட்டில் இருந்த நான்கு பேரையும் வீச்சரிவாளால் வெட்டியதுடன் நாட்டுத் துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர். இதில் நால்வரும் பலத்த காயமடைந்தனர்.இதையடுத்து, பெண்கள் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 25 பவுன் நகைகளையும், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அரக்கோணம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்ட்டுள்ளனர். தீரன் பட பாணியில் நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை போலீசார் நேரில் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், 'தீரன்’ பட பாணியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய பேசியதாக தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களை ஆங்கிலத்தில் பேச வற்புறுத்தியதாகவும் வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளையில் வடமாநில கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.