பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம் படிக்கட்டு, ஏணியில் தொங்கியபடி செல்லும் அவலம்
கிராமப்புறங்களில் இருந்து வரும் பஸ்களில் படிக்கட்டு, ஏணியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.
பாகூர்
கிராமப்புறங்களில் இருந்து வரும் பஸ்களில் படிக்கட்டு, ஏணியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.
பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
பாகூர் பகுதிகளில் அரசு, தனியார் பள்ளிகள் என 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. குருவிநத்தம், சோரியாங்குப்பம், கன்னியகோவில், கிருமாம்பாக்கம், முள்ளோடை, மதிகிருஷ்ணாபுரம், சேலியமேடு, அரங்கனூர், குடியிருப்புபாளையம், இருளன் சந்தை, எடப்பாளையம், திருப்பனாம்பாக்கம், கரையாம்புத்தூர், கலையூர், கிருஷ்ணாவரம் ஆகிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பள்ளிக்கு மாணவ-மாணவிகள் தினந்தோறும் பஸ்களில் வந்து செல்கின்றனர்.
ஆபத்தான பயணம்
பள்ளிகள் திறந்து வெகு நாட்களாகியும் பள்ளி மாணவ- மாணவர்களுக்கு அரசு சார்பில் ஒரு ரூபாய் சிறப்பு பஸ் இன்னும் இயக்கப்படவில்லை. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. கிராமப்புறங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்கள் வருவதால், அதை தவற விட்டால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதனால் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் முண்டியடித்துக் கொண்டு மாணவ, மாணவிகள் பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் பஸ்களின் படிக்கட்டு, மேற்கூரை, ஏணிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதைப் பார்த்து மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர்.
கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கான சிறப்பு பஸ்சை உடனடியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story