விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்


விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 18 Dec 2021 9:04 PM IST (Updated: 18 Dec 2021 9:04 PM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.

புதுச்சேரி
விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.

விலைவாசி உயர்வு

பெட்ரோல், டீசல், கியாஸ் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துமாறு  ராகுல்காந்தி காங்கிரசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுவையில்  இன்று காங்கிரசார் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஊர்வலம் நடத்தினர்.

நடைபயணம்

இதற்காக அவர்கள் வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே கூடினார்கள். சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அவர்கள் ஊர்வலத்தை தொடங்கினர். இந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி. ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.
இந்த ஊர்வலம் இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, காமராஜர் சிலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக மாதா கோவிலை வந்தடைந்தது. அதற்கு மேல் செல்ல அவர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

கோமா நிலையில்...

இதைத்தொடர்ந்து அங்கேயே காங்கிரசார் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியாமல் கோமா நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த நடைபயணத்தில் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன், அனந்தராமன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story