புதுச்சேரியில் கள்ளநோட்டுகள் புழக்கம் சி பி சி ஐ டி போலீசார் விசாரணை


புதுச்சேரியில் கள்ளநோட்டுகள் புழக்கம் சி பி சி ஐ டி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Dec 2021 9:32 PM IST (Updated: 18 Dec 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

புதுச்சேரி
புதுவையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கள்ளநோட்டு

சுற்றுலா நகரான புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக இங்கு விபசாரம், போதை வஸ்துகள் நடமாட்டம் உள்ளிட்டவை தாராளமாக நடந்து வருகின்றன.
இதற்கிடையே தற்போது கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. புதுவையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து பணம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வலைவீச்சு

அந்த பணக்கட்டுகளை சோதித்தபோது, அதில் ரூ.100 கள்ளநோட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ரிசர்வ்    வங்கியின்     மேலாளர் அமர்நாத்       புதுவை       சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகிறார்.

Next Story