குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆசிரமத்தில் இளம்பெண் கற்பழிப்பு; சாமியார் கைது
ஆசிரமத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த சாமியார் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த மனைவியும் கைதானார்.
பாலியல் அத்துமீறல்
சென்னை புழல் அடுத்த பத்மாவதி நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 48). சாமியாரான இவர், புழல் விநாயகபுரம் சூரப்பட்டு சாலை அருகே ஆசிரமம் நடத்தி வருகி்றார். இவருடைய மனைவி புஷ்பலதா (43).
கொளத்தூரைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண், தான் பிளஸ்-2 படிக்கும்போது தனது தாயாருடன் இந்த ஆசிரமத்துக்கு வந்து சென்றார். அப்போது அவருக்கு சாமியார் சங்கரநாராயணனுடன் அறிமுகம் ஏற்பட்டது.
அதன்பிறகு மீண்டும் ஆசிரமத்துக்கு வந்த அவருக்கு, சாமியார் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்து விட்டார். இதற்கு சாமியாரின் மனைவியும் உடந்தையாக இருந்தார்.
2018-ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு திருமணம் ஆனது. கணவர் வௌிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதை அறிந்த சாமியார் சங்கரநாராயணன், மீண்டும் பெண்ணை ஆசிரமத்துக்கு அழைத்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் உனது அந்தரங்க படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
போக்சோவில் கைது
இதில் இளம்பெண் கர்ப்பமானார். அவருக்கு குழந்தையும் பிறந்து விட்டது. அதன்பிறகும் சாமியார் அவருக்கு போன் செய்து, தன்னுடன் உல்லாசத்துக்கு வரும்படி அழைத்து மிரட்டியதால் விரக்தி அடைந்த இளம்பெண், மாதவரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணகி வழக்குப்பதிவு செய்து சாமியார் சங்கரநாராயணன், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி புஷ்பலதா இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story