மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது


மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது
x
தினத்தந்தி 19 Dec 2021 12:16 PM IST (Updated: 19 Dec 2021 12:16 PM IST)
t-max-icont-min-icon

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது.

சென்னை,

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது.  மருத்துவப் படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜனவரி 7 ஆம் தேதி (மாலை 5 மணி) வரை விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப்பிக்க ஜனவரி 10 ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், எம்பிபிஎஸ் படிப்பில் சேர 6,957 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் சேர 1,925 இடங்களும் உள்ளன என்றும்,  ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதியை மத்திய அரசு வெளியிட்ட பிறகு  அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும் .மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


Next Story