இலங்கை கடற்படையால் 54 பேர் சிறைப்பிடிப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்


இலங்கை கடற்படையால் 54 பேர் சிறைப்பிடிப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Dec 2021 3:50 PM IST (Updated: 19 Dec 2021 5:05 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 54 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் தொடங்கி உள்ளனர்.

ராமேஸ்வரம்,

ராமேசுவரத்திலிருந்து  நேற்று 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் செல்வம், வினால்டல், சார்லஸ், வெல்தாஸ். லியோ ஆகியோருக்கு சொந்தமான 6 விசைப்படகுகளுடன் 42 மீனவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ராமேசுவரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை ராமேஸ்வரம் பஸ் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். 

இதனிடையே நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 12  மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டபம் தென்கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற 12 மீனவர்களை சிறைபிடித்ததுடன் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்தாக மேலும் 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

Next Story