பயணிகள் வசதிக்காக 543 ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி
543 முக்கிய ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் வைஃபை அறிமுகப்படுத்த திட்டம் தீட்டி வருவதாகவும் இதன் மூலம் முதல் அரை மணிநேரத்திற்கு பயணிகள் இலவசமாக வைஃபை வசதியை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை -135, திருச்சி -105, சேலம் - 79, மதுரை - 95, பாலக்காடு - 59, திருவனந்தபுரம் - 70 என மொத்தம் 543 ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்தில் இதுவரை 5,087 கீ.மீ தூரத்துக்கு கண்ணாயிழை கேபிள் தொடர்பு அமைப்பு என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story