4 பேர் உயிரிழப்பு; 610 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 1,01,616 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 610 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 613இல் இருந்து 610 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ஏற்கனவே 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 129 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் மேலும் 4 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,680 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தார்.
கொரோனாவில் இருந்து மேலும் 682 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,95,856 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7,270 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்:
கோவையில் 101 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 98 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 46 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 53 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு -45, திருப்பூர் -43, சேலம் -34, நாமக்கல் -37, திருவள்ளூர் 16, நீலகிரி -12 என பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story