அம்மா வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்குத்தான் க.அன்பழகன் மாளிகை - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
அம்மா வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்குத்தான் பேரா க.அன்பழகன் மாளிகை எனப் பெயரிடப்பட்டுள்ளது எனவும் அம்மா வளாகம்' பெயர் மாற்றப்படவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டடத்திற்கு 'பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என பெயர் சூட்டியதை எதிர்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் மனதில் திராவிட இயக்க சிந்தனைகள் அறவே நீர்த்துப்போய் விட்டன என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகிவிட்டது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பெயர் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. திராவிட இயக்கத்திற்காவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் க.அன்பழகன்.
ராணிமேரி கல்லூரி வளாக கட்டிடத்தின் கலைஞர் மாளிகை என்ற பெயர் அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டது. அண்ணா நூலகத்தையும் புதிய சட்டமன்றத்தையும் சிதைத்தது அதிமுக அரசு, அதைப்போல அம்மா வளாகம் என்ற பெயர் மாற்றப்படவில்லை.
வளாகத்திற்கு ஒரு பெயரும், வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தனித்தனிபெயரும் வைப்பது வாடிக்கை தான். பொதுவாக நிறையக் கட்டிடங்கள் அமைந்துள்ள வளாகத்திற்கு ஒரு பெயரும், அந்த வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடங்களுக்குத் தனித்தனிப் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளமைக்குப் பல எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும்.
பொறுப்புள்ள பதவி வகிக்கும் எதிர்கட்சித் தலைவரும், துணை தலைவரும்- இது போன்ற அறிக்கைகள் வெளியிடும் போது குறைந்த பட்சம் உண்மை என்ன என்பதை அறிந்து கொண்டு அறிக்கை விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story