தமிழக காவல்துறை டிஜிபி நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் - அண்ணாமலை


தமிழக காவல்துறை டிஜிபி நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் -  அண்ணாமலை
x
தினத்தந்தி 19 Dec 2021 9:30 PM IST (Updated: 19 Dec 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

தமிழக காவல்துறை டிஜிபி நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் தங்களை பாஜகவுடன் இணைத்து கொண்டனர் 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது காவல்துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவினர் மீது வழக்குகள் தொடரும் போலீசார், உரிய  ஆதாரங்கள் அளித்தும் சம்பந்தப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.  இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை டிஜிபி நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story