கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட என்ஜினீயரிங் மாணவரின் கதி என்ன?
நண்பர்களுடன் குளித்த போது கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட என்ஜினீயரிங் மாணவரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் போலீசாரும், கடலோர காவல் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நண்பர்களுடன் குளித்த போது கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட என்ஜினீயரிங் மாணவரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் போலீசாரும், கடலோர காவல் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
என்ஜினீயரிங் மாணவர்
ஆந்திர மாநிலம் நெல்லூர் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் நீரஜ் ரெட்டி (வயது 19). இவர் புதுச்சேரி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.
நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் நீரஜ் ரெட்டி, தன்னுடன் படிக்கும் நண்பர்கள் பிரோஸ் (19), அப்துல் (19), மகேஷ் (19), ராகுல் (19), லோகேஷ் (19), ருத்வி (19) ஆகிய 6 பேருடன் அரியாங்குப்பத்தை அடுத்த சின்னவீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்றார்.
தேடும் பணி தீவிரம்
அங்குள்ள முகத்துவாரத்தில் 7 பேரும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் நீரஜ் ரெட்டி, பிரோஸ் ஆகியோர் இழுத்து செல்லப்பட்டனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பிரோசை மட்டும் மீட்டனர். ஆனால் நீரஜ்ரெட்டி கடல் அலையில் அடித்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பிரோசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலில் மூழ்கிய நீரஜ் ரெட்டியின் கதி என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் போலீசாரும், கடலோர காவல் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story