முன்மாதிரி கிராம விருதுக்காக சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை தேர்வு செய்ய குழு
முன்மாதிரி கிராம விருதுக்காக சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை தேர்வு செய்ய குழு அரசாணை வெளியீடு.
சென்னை,
சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்குவதற்காக, கிராமங்களை தேர்வு செய்யும் குழுவை அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அறிவிப்பு
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பி. அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், ‘முன்மாதிரி கிராம விருது’ உருவாக்கப்பட்டு மாவட்டத்துக்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 37 கிராம ஊராட்சிகளுக்கு விருது வழங்கப்படும் என சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த விருதுடன் கேடயம், ரூ.7.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் எனவும், மாநில அளவில் சிறப்பாக செயல்படும் 3 ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன்மாதிரி கிராம விருது வழங்கப்பட்டு அதற்கான கேடயமும், தலா ரூ.15 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
8 சிறப்பம்சங்கள்
இந்த அறிவிப்பின் அடிப்படையில் அரசுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் கடிதம் எழுதினார். அதில், முன்மாதிரி கிராம விருதுக்கு, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலை, திடக்கழிவு மேலாண்மை, குப்பை மறுசுழற்சி, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, வீட்டுக் கழிவுநீர் மேலாண்மை, களப்பகுதியில் தூய்மைக்கான விழிப்புணர்வு, கிராமத்தை அழகாக்குவது, கிராமத்தின் தூய்மைக்கான சிறப்பு முயற்சிகள் உள்ளிட்ட 8 சிறப்பம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த 8 சிறப்பம்சங்களை அடிப்படையாக கொண்டு விருதுகளை வழங்க தமிழக ஊரக வளர்ச்சித்துறை முடிவு செய்து, அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
குழு அமைப்பு
சிறப்பாக செயல்படும் முன்மாதிரி கிராமத்தை தேர்வு செய்ய, மாநில அளவில், ஊரக வளர்ச்சி இயக்குநர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், மாவட்ட அளவில், மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு ஒரு குழுவும், வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அலுவலரை தலைவராகக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 37 மாவட்டங்களில் தலா ஒரு கிராம ஊராட்சிக்கு முன்மாதிரி கிராம விருது வழங்குவதற்கும், சிறப்பாக செயல்படும் 3 ஊராட்சிகளுக்கு மாநில அளவில் விருது வழங்கவும் மொத்தம் ரூ.3 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கும்படி அரசிற்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் நிதியை விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்மாதிரி கிராமத்தை தேர்வு செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள 8 சிறப்பம்சங்களை எப்படி கணக்கிட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களும் அரசாணையுடன் வெளியிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story