பத்திரப்பதிவு துறையில் குறைபாடுகளை கண்டறிய உயர்மட்ட குழு அமைப்பு - அமைச்சர் மூர்த்தி தகவல்


பத்திரப்பதிவு துறையில் குறைபாடுகளை கண்டறிய உயர்மட்ட குழு அமைப்பு - அமைச்சர் மூர்த்தி தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2021 2:25 AM IST (Updated: 20 Dec 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

பத்திரப்பதிவு துறையில் குறைபாடுகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை, 

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பொதுமக்களின் குறைகளை அமைச்சர் மூர்த்தி கேட்டறிந்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். பின்னர் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அவர் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் குறைகளை கேட்டு தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறேன்.

மதுரை மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டில் நாட்டு இன மாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் உள்ள குறைகளை கண்டறிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் குறைகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் கொள்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story