பாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த 2 பேர் கைது
பாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். வேலை செய்யும் ஊழியர்கள் தொழிற்சாலை நிர்வாகம் சுங்குவார்சத்திரம் வடக்குப்பட்டு, ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து அங்கிருந்து அவர்கள் பணி புரியும் தொழிற்சாலைக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்கள் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மறியல் போராட்டம்
சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரு சிலரை தவிர மீதம் உள்ளவர்கள் சிகிச்சை முடிந்து விடுதிக்கு திரும்பினர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த 8 பெண் ஊழியர்களை காணவில்லை என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது.
இந்த தகவலை தொடர்ந்து ஊழியர்கள் ஒரகடம் வடக்குபட்டு, புளியம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழி்த்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
சிறையில் அடைப்பு
இநத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 67 பெண் தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த பல்வேறு அமைப்புகளை சார்ந்த 22 பேர் என மொத்தம் 89 பேரை ஒரகடம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் ஊழியர்கள் சொந்த ஜாமீனில் விடப்பட்டனர். 22 பேர் கைது செய்யப்பட்டு காஞ்சீபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். சுங்குவார்சத்திரத்திலும் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சி.ஐ.டி.யு. சார்பில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலை படப்பை பகுதியில் கோஷங்களை எழுப்பி 30-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மணிமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.அதே போன்று காஞ்சீபுரம் காந்தி ரோடு பெரியார் நினைவுதூண் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
97 பேர் மீது வழக்கு
தரமற்ற உணவு சாப்பிட்டு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு பின்னர் திரும்பிய பெண் ஊழியர்கள் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். தரமற்ற உணவு வழங்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் நேற்று முன்தினம் சிறுவானூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் அந்த தனியார் விடுதியின் வார்டன் உள்பட 97 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கியிருந்த பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த சக்தி கிச்சன் மேற்பார்வையாளர்கள் பிபின் (வயது 34), கவியரசு (32) ஆகியோரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்.
வளர்மதி கைது
பாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் சேலத்தை சேர்ந்த வளர்மதி அவதூறு தகவல்களை பதிவிட்டதாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நகர் போலீசில் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் புகார் செய்தார். போலீசார் வளர்மதி மீது தமிழக அரசுக்கும், போலீஸ் துறைக்கும் ஏதிராக செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
வளர்மதி ஏற்கனவே நெடுவாசல், சேலம் எட்டுவழிசாலை திட்டம் போன்றவற்றை எதிர்த்து சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story