தூக்கில் பிணமாக தொங்கிய டிரைவர்


தூக்கில் பிணமாக தொங்கிய டிரைவர்
x
தினத்தந்தி 20 Dec 2021 10:07 PM IST (Updated: 20 Dec 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

நெட்டபாக்கத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய டிரைவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

நெட்டபாக்கத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய டிரைவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
குடிபழக்கம்
நெட்டப்பாக்கம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 44). டிரைவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  அறிவழகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்து மீண்டு வருவதற்காக அவர் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக மது அருந்தாமல் இருந்ததால் அவர் தானாக புலம்பி கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அறிவழகன், மாலையை கழற்றி விட்டு குடிப்பதற்காக வீட்டில் பணம் கேட்டுள்ளார். ஆனால் சாந்தி பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு குடிக்க சென்றார். பின்னர் இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. 
சாவில் சந்தேகம்
நேற்று காலை வீட்டின் அருகே உள்ள காலிமனையில் உள்ள ஒரு மரத்தில் அறிவழகன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நெட்டப்பாக்கம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி சாந்தி போலீசில் புகார் அளித்தார். அதில் தனது கணவர் காலில் காயங்கள் இருப்பதால் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story